காலாவதியான உணவு, இறைச்சி பறிமுதல்


காலாவதியான உணவு, இறைச்சி பறிமுதல்
x

ஜோலார்பேட்டை பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி காலாவதியான உணவு, இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர்

உணவு பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் வேலூர் ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில் குமார், நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஆகியோர் நேற்று சந்தைக்கோடியூர், பார்சம்பேட்டை பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது காலாவதியான 3 கிலோ உணவை பறிமுதல் செய்து அளித்தனர். இரண்டு ஓட்டல்களில் கலர் பவுடர்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை ஒன்றில் விற்பனைக்கு வைத்திருந்த தமிழக அரசு தடை செய்யப்பட்ட ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருளை பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

கோழி இறைச்சி

மேலும் சந்தைக்கோடியூர் பகுதியில் இறைச்சி கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ பழைய கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அளித்தனர். இரண்டு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் 2006-ன் படி நோட்டீஸ் வழங்கினர். மேலும் 3 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்று இல்லாததால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. உணவகம் மற்றும் இறைச்சி கடைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும், பழைய உணவு மற்றும் இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

உணவு பாதுகாப்பு சான்று இல்லாமல் கடை நடத்துபவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொண்டு கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும், பதிவு சான்று பெறாதவர்கள் உடனடியாக பதிவு சான்று பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.

1 More update

Next Story