செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் நிலம் அபகரிப்பு: மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஊழியர் புகார் மனு
செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் நிலத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஊழியர் புகார் மனு அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பேரூராட்சி, ராமதாசபுரம் 8-வது தெருவில் வசித்து வருபவர் நடராஜன் (வயது 70). ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர். இவரது மனைவி கெளரி (65). இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் நிலத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஊழியர் புகார் மனு அளித்துள்ளார்.
செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் நிலத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஊழியர் புகார் மனு அளித்துள்ளார்.
மகன் ரவிச்சந்திரன், மருமகள் கீதா, பேரன் அஜித் குமார் ஆகியோருடன் நடராஜன் மற்றும் அவரது மனைவி கெளரி வசித்து வந்தனர். இந்நிலையில், ரவிச்சந்திரன் தனது மகன் அஜித்குமாருக்கு ஆட்டோ வாங்க வேண்டும் என்று கூறி பருத்திப்பட்டு கிராமத்திலுள்ள நிலத்தை செட்டில்மெண்ட் செய்து தருமாறு நடராஜனை வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும், பெற்றோரின் தேவையை கடைசி வரையில் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார். எனவே, 2020-ம் ஆண்டு ஆவடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அந்த நிலத்தை வேறு நபருக்கு ரவிச்சந்திரன் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து உள்ளார். இதனை அறிந்த நடராஜன் உனது சகோதரிகளுக்கு நிலம் விற்பனை செய்வது தெரியுமா? என்று ரவிச்சந்திரனிடம் கேட்டு உள்ளார். இதனால் பெற்றோரை ரவிச்சந்திரன் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.
இதனையடுத்து கடந்த மாதம் 30-ம் தேதி திருநின்றவூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் நடராஜன் புகார் அளித்தார்.
இதனால் ரவிச்சந்திரன் பெற்றோரை வீட்டில் நுழையக்கூடாது என விரட்டி உள்ளார். எனவே, ஆட்டோ வாங்க வேண்டும் எனக் கூறி செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் வீட்டை அபகரித்துக் கொண்டு வீட்டிலிருந்து விரட்டிய மகன், மருமகள், பேரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடராஜன் மற்றும் கௌரி புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ. உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.