அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு பெற விண்ணப்பிக்க கால நீட்டிப்பு


அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு பெற விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
x

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு பெற விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையால் வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 14.6.2018 முதல் 13.9.2018 வரை மூன்று மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை ஐகோர்ட்டால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி கடந்த 10.2.2021 அன்று வழங்கிய தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி 22.3.2021 முதல் 4.4.2021 வரை இருவார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் 6 மாதம் (24.6.22 முதல் 31.12.22 வரை) கால நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் உரிய விவரங்களை சமர்ப்பித்து இசைவு பெற சம்பந்தப்பட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tcp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story