டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறிப்பு; சிறுவன் உள்பட 3 பேர் கைது


டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறிப்பு; சிறுவன் உள்பட 3 பேர் கைது
x

டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

திருச்சி அரியமங்கலம் அம்மா குளம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 57). இவர் பொன்மலைப்பட்டி கடைவீதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில், பாரை திறப்பதற்காக பொன்மலை பொன்னேரிபுரம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அவரை வழிமறித்த பொன்மலை மலையடிவாரம் மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்த பிரசன்னா(28), கீழ கல்கண்டார்கோட்டை பெரியார் நகரை சேர்ந்த சச்சின்(23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ராஜேந்திரனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ராஜேந்திரன் பணம் தர மறுத்துள்ளார். இதையடுத்து பிரசன்னா அரிவாளையும், சச்சின் கத்தியையும் காட்டி மிரட்டி ராஜேந்திரனிடம் இருந்து ரூ.2,600-ஐயும், மோட்டார் சைக்கிளையும் பறித்து சென்றனர். இது குறித்து ராஜேந்திரன் பொன்மலை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசன்னா, சச்சின் மற்றும் சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்து பிரசன்னா, சச்சின் ஆகியோரை சிறையில் அடைத்தனர். சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். பிரசன்னா மற்றும் சச்சின் மீது பொன்மலை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story