கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இன்றும் கூடுதல் பஸ்கள் இயக்கம்


கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இன்றும் கூடுதல் பஸ்கள் இயக்கம்
x

கோப்புப்படம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இன்றும் சென்னையிலிருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.

சென்னை,

உலகம் முழுவதும் கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை மாலை முதல் சென்னையில் இருந்து பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறையை முன்னிட்டு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்திருந்தது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (கிறிஸ்துமஸ்) தொடர் விடுமுறை என்பதால் கோயம்பேடு பஸ் நிலையம், சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக இன்றும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து கூடுதலாக 250 பஸ்கள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.


Next Story