அச்சமின்றி தேர்வை எதிர்கொண்டு வெற்றி காணுங்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ,
நாளைய தினம் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதவுள்ள நம் அன்பு மாணவச் செல்வங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுத்தேர்வு என்பது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான தேர்வு அல்ல. வாழ்க்கையில் இதுவும் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து, அச்சமின்றி தேர்வை எதிர்கொண்டு வெற்றி காணுங்கள்.
உங்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட 'நான் முதல்வன்' போன்ற நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இருக்கின்றன. உங்கள் இலக்குகளை அடைய நம் கழக அரசு என்றும் துணை நிற்கும். என தெரிவித்துள்ளார்
Related Tags :
Next Story