பொங்கல் பரிசு தொகுப்பு சம்பந்தமான புகார் தெரிவிக்க வசதி - கலெக்டர் தகவல்


பொங்கல் பரிசு தொகுப்பு சம்பந்தமான புகார் தெரிவிக்க வசதி - கலெக்டர் தகவல்
x

பொங்கல் பரிசு தொகுப்பு சம்பந்தமான புகார் தெரிவிக்க செல்போன் எண் வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள 6 லட்சத்து 20 ஆயிரத்து 95 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 927 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்க தொகையும் ஒரே நேரத்தில் ரேஷன் கடைகளில் மூலமாக நாளை முதல் வழங்கப்படும்.

கூட்ட நெரிசலினை தவிர்க்கும் பொருட்டு ஒரு நாளைக்கு சுமார் 200 முதல் 250 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் தொகை வழங்கப்படும். அதன் விவரம் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் ஒட்டி விளம்பரப்படுத்தப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணத்தினை விற்பனை முனைய எந்திரத்தின் மூலம் கைரேகை சரி பார்க்கும் முறைப்படி வழங்கப்படும். அங்கீகார சான்று வழங்கியதன் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலம் பொருட்கள் பெறும் அட்டைதாரர்களுக்கு பதிவேட்டில் உரிய நபர்களின் ஒப்பம் பெற்று பொங்கல் பரிசு வழங்கப்படும்.

பொங்கல் பரிசு தொகுப்பு சம்பந்தப்பட்ட தகவல் புகார் ஏதேனும் இருப்பின் அதனை தெரிவிக்க வேண்டிய வட்ட எண்கள் மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வட்டம் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் பின்வருமாறு:-

திருவள்ளூர்- 9445000177, திருத்தணி- 9445000182, பள்ளிப்பட்டு- 9445000183, பொன்னேரி- 9445000178, கும்மிடிப்பூண்டி- 9445000179,

ஊத்துக்கோட்டை - 8098479640, பூந்தமல்லி - 9445000181, ஆவடி - 9894939884, ஆர்.கே.பேட்டை - 9786862419 மாவட்ட கட்டுப்பாட்டு அறை - 044-27662400 மேற்கண்ட எண்களில் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story