தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலம் புதுப்பிக்க வேண்டுகோள்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் தங்களது உரிமத்தை புதுப்பிக்க 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
திருவள்ளூர்
தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உரிம கட்டணத்தை செலுத்தி படிவம் 2-ஐ சமர்ப்பித்து உரிமத்தை புதுப்பித்து இணையவழி முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தாமதமாக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்ப படிவங்களுக்கு தாமத கட்டணம் வசூலிக்கப்படும். நவம்பர் 30-ந் தேதி வரை 10 சதவீதமும், டிசம்பர் 31-ந் தேதி வரை 20 சதவீதமும், அதற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 30 சதவீதமும் தாமத உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் திருவள்ளூர், ரெயில் நிலையம் அருகில் பெரியகுப்பத்தில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story