போலி டாக்டர் கைது


போலி டாக்டர் கைது
x

போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

மருத்துவ சிகிச்சை

பெரம்பலூர் அருகே சோமண்டாபுதூர் பாரதி நகரை சேர்ந்தவர் செல்வசாமி. இவரது மகன் ராமகிருஷ்ணன் (வயது 28). இவர் எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் கிராமத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். ராமகிருஷ்ணன் தனது மருந்து கடைக்கு உடல்நலக்குறைவுக்காக மருந்து-மாத்திரைகள் வாங்க வரும் பொதுமக்களில் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். இது குறித்து மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோகன் அளித்த தகவலின் பேரில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமகிருஷ்ணனை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மருத்துவம் படிக்காதது தெரியவந்தது.

கைது

இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த ஸ்டெதஸ்கோப் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் ராமகிருஷ்ணனை ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.

1 More update

Related Tags :
Next Story