போலி ஆபாச வீடியோ விவகாரம் : நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றி - தருமபுரம் ஆதீனம்


போலி ஆபாச வீடியோ விவகாரம் : நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றி - தருமபுரம் ஆதீனம்
x

தருமபுர மடத்தையும், எங்களையும் மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் நன்றி என தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

போலி ஆபாச வீடியோ விவகாரத்தில், நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், காவல்துறைக்கும் நன்றி என தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை, தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிக துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.. தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களுக்கும், எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். என தெரிவித்துள்ளார்.


Next Story