சூளகிரி பகுதியில்வரத்து அதிகரிப்பால் புதினா விலை வீழ்ச்சிதோட்டங்களில் மாடுகளுக்கு தீவனமாகிறது


சூளகிரி பகுதியில்வரத்து அதிகரிப்பால் புதினா விலை வீழ்ச்சிதோட்டங்களில் மாடுகளுக்கு தீவனமாகிறது
x
தினத்தந்தி 6 April 2023 7:00 PM GMT (Updated: 6 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி பகுதியில் வரத்து அதிகரிப்பால் புதினா விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தோட்டங்களில் புதினா பறிக்காமல் விட்டுவிடுவதால் மாடுகளுக்கு தீவனமாகிறது.

புதினா

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளான மோதுகானபள்ளி, கீரனப்பள்ளி, பெல்லட்டி மற்றும் இதர கிராமங்களில் விவசாயிகள் 20 ஏக்கருக்கும் மேல் புதினா பயிரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கட்டு புதினா ரூ.5, ரூ.10 என விலை போனது. தற்போது வரத்து அதிகரிப்பால் மார்க்கெட்டில் புதினா விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்கனவே புதினா பயிரிட அதிக பணம் செலவு செய்து அந்த தொகை கூட கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

மாடுகளுக்கு தீவனம்

இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள் தோட்டங்களில் புதினா பறிப்பதற்கான கூலித்தொகையை செலவழிக்க முன்வரவில்லை. மேலும் தோட்டங்களில் புதினா செடிகளை பறிக்காமல் விவசாயிகள் விட்டு விடுகின்றனர்.

இதனால் தோட்டங்களில் புதினா மாடுகளுக்கு தீவனமாகி வருகிறது. இதற்கிடையே மோதுகானபள்ளியில் விவசாயி ஒருவர் சுமார் 1 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த புதினா செடிகளை டிராக்டர் மூலம் அழித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story