பிரபல சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திண்டிவனம் அருகே பிரபல சாராய வியாபாரியை தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம்
திண்டிவனம் அருகே முப்பிலி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(வயது 27). பிரபல சாராய வியாபாரியான இவர் அப்பகுதியில் தொடர்ந்து சாராயம் கடத்துவது, விற்பனை செய்வது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாலும் ஜாமீனில் வெளியேவரும் இவர் மீண்டும் சாராயம் கடத்தல், விற்பனை செய்தல் போன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். அவரது குற்ற செயலை தடுக்கும் வகையில் சந்தோஷ்குமாரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் சந்தோஷ்குமாரை தடுப்பு காவல் சட்டத்தில் பெரியதச்சூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story