விவசாயி விஷம் குடித்து தற்கொலை


விவசாயி விஷம் குடித்து தற்கொலை
x

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த முக்கரம்பாக்கத்தில் உள்ள டி.ஆர். நகரை சேர்ந்த ஜெயகுமார் (வயது 36). விவசாயியான இவர் நேற்று முன் தினம் பூவலம்பேடு அடுத்த தேர்வாய் காப்பு காட்டு பகுதிக்கு தனியாக சென்றார். காப்புகாட்டில் வைத்து அவர் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் இதுகுறித்து தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கு பதறி அடித்துக்கொண்டு சென்ற உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விவசாயி ஜெயகுமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமார் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது வேறு எதேனும் காரணம் இருக்குமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story