தேவதானப்பட்டி அருகே சரக்கு வேன் மோதி விவசாயி பலி


தேவதானப்பட்டி அருகே சரக்கு வேன் மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 25 Oct 2023 9:30 PM GMT (Updated: 25 Oct 2023 9:31 PM GMT)

தேவதானப்பட்டி அருகே சரக்கு வேன் மோதி விவசாயி பலியானார்.

தேனி

தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரம், சந்திராபுரம் ஒத்தவீடு தெருவை சேர்ந்தவர் அடைக்கண் (வயது 52). விவசாயி. நேற்று முன்தினம் இவர், அதே தெருவில் உள்ள தனது மகன் பாண்டி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் அடைக்கண் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அடைக்கண் இறந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அடைக்கண் மீது மோதிய சரக்கு வேனை பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த அஜித்கான் (28) என்பவர் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story