காவிரி நீரை பெற்று தரக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்


காவிரி நீரை பெற்று தரக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்
x

காவிரி நீரை பெற்று தரக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

அறந்தாங்கி தலைமை தபால் நிலையம் எதிரே கருகும் பயிரை காப்பாற்ற தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்று தரக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராமையன், துணை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க மாநில துணை செயலாளர் இந்திரஜித் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க மாநில துணை தலைவர் முகமதலி பேசினார். போராட்டத்தில் காவிரியில், கர்நாடக அரசு வழங்க வேண்டிய சட்ட ரீதியான தண்ணீரை உடனடியாக திறந்திட உச்சநீதிமன்றம் அவசர வழக்காக எடுத்து உடன் உத்தரவிட வேண்டும். குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு தலா ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். காவிரியில் தமிழகத்திற்கு மாதம் வாரியாக தண்ணீர் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு மறுத்தால் அம் மாநிலத்தில் உள்ள அணைகளை காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து தண்ணீர் வழங்கிட வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை பட்ட நெல் சாகுபடி காப்பீடு செய்ய எந்த நிறுவனமும் முன்வரவில்லை. எனவே தேசிய வேளாண் காப்பீட்டுக் கழகம் மூலம் காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் விவசாய சங்க நிர்வாகி மாதவன், மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி, மாவட்ட செயலாளர் சலோமி மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story