விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் போராட்டம்
விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் போராட்டம்
கோயம்புத்தூர்
சுல்தான்பேட்டை
தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும், கொப்பரைக்கு பதிலாக தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சுல்தான்பேட்டை அருகே பச்சார்பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு தலைவர் வக்கீல் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story