கோனூரில் உள்ள ஏரிகளை சேர்க்க கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்


கோனூரில் உள்ள ஏரிகளை சேர்க்க கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்
x

மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் கோனூர் கிராமத்தில் உள்ள ஏரிகளை சேர்க்க கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

மேட்டூர்:-

மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் கோனூர் கிராமத்தில் உள்ள ஏரிகளை சேர்க்க கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உபரி நீர் திட்டம்

மேட்டூரை அடுத்த கோனூர் கிராமத்தை சேர்ந்த திப்பம்பட்டி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு மேட்டூர் உபரிநீர் திட்டத்திற்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது, இந்த நீரேற்று நிலையத்தில் இருந்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த 100 ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆனால் நீரேற்று நிலையம் செயல்பட்டு வரும் கோனூர் கிராமத்தில் உள்ள ஆண்டிக்கரை ஏரி, செக்கான் ஏரி, தானம்பட்டி, பூரல் கோட்டை, புது வேலமங்கலம் உள்பட 10 ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்புவது இல்லை. மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் மேற்கண்ட ஏரிகளையும் சேர்க்கவில்லை.

உண்ணாவிரதம்

எனவே மேற்கண்ட 10 ஏரிகளுக்கு தண்ணீரை அனுப்பி வைக்கவும், உபரிநீர் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோனூர் கிராம கிணற்று பாசன மற்றும் மானாவாரி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டூர் சமத்துவபுரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் சதாசிவம் எம்.எல்.ஏ., ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கருணாகரன், சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரேவதி ராஜசேகரன், பா.ம.க. மாவட்ட செயலாளர் ராஜசேகரன், மேச்சேரி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜா, மேச்சேரி முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் ராமகிருஷ்ணன், பா.ம.க. ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார், துரைராஜ், அ.தி.மு.க. மேச்சேரி ஒன்றிய செயலாளர் செல்வம், பா.ஜனதா கட்சி சார்பில் ரவி ஜெகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள். உண்ணாவிரதத்தை எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. முடித்து வைத்தார்.


Next Story