விவசாயி நூதன போராட்டம்


விவசாயி நூதன போராட்டம்
x

கர்நாடக அரசை கண்டித்து விவசாயி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே எருக்கலக்கோட்டையை சேர்ந்த விவசாயி அறிஞர். இவர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்காமல் இருப்பதை கண்டித்தும், காவிரியில் தண்ணீர் திறக்கும் வரை பட்டினி கிடந்து நூதன போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி முழங்காலிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட படி போராட்டம் நடத்தினார். மேலும் காவிரியில் தண்ணீர் திறக்காததால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், விவசாயிகள் பாதிப்படைவதாகவும் கூறினார். போராட்டத்தில் ஈடுபட்ட அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அப்புறப்படுத்தி கோரிக்கை தொடர்பாக மனு அளித்து விட்டு செல்ல அறிவுறுத்தினர். அதன்பின் அவர் போராட்டத்தை கைவிட்டார்.


Next Story