விழுப்புரத்தில்பட்ஜெட் நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்


விழுப்புரத்தில்பட்ஜெட் நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் பட்ஜெட் நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம்

போராட்டம்

விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் நலன்களை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேல்மாறன், மாவட்ட தலைவர் தாண்டவராயன், செயலாளர் முருகன், பொருளாளர் சிவராமன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அர்ச்சுணன், செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பட்ஜெட் நகல் தீ வைத்து எரிப்பு

இவர்கள் அனைவரும், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் நலன்களை முற்றிலும் புறக்கணித்த மத்திய அரசை கண்டித்தும், அவர்கள் வெளியிட்ட பட்ஜெட்டை கண்டித்தும் கோஷம் எழுப்பியவாறு பட்ஜெட் நகலை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போகச்செய்தனர்.


1 More update

Next Story