கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை


திரவண்ணாமலையில் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர்கள் தரையில் அமர்ந்து கைகளை துண்டால் பின்புறம் கட்டி கொண்டு, வாழையிலையில் சாப்பாடு வைத்து சாப்பிட முடியாமல் தவிப்பது போன்று செய்து நூதனமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து புருசோத்தமன் கூறுகையில், 2023-24-ம் ஆண்டின் வேளாண் திட்ட கையேடு கடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் வழங்கப்பட்டது.

வேளாண்மையை சார்ந்த துறைகளான நீர்வள- நிலவள திட்டம், தோட்டக்கலைதுறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை வளர்ப்பு துறை உள்ளிட்ட துறைகளின் திட்டங்கள் குறித்து கையேடுகள் விவசாயிகளுக்கு வழங்கவில்லை.

எனவே அக்டோபர் முதல் வாரத்தில் அனைத்து துறைகள் இணைத்த திட்ட கையேடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் பேச பெயர் பதிவு செய்தும் பேச முன்னுரிமை வழங்காத அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றார்.

பின்னர் அவர்கள் கோரிக்கை மனுவை மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் அளித்தனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தினால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story