விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x

விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை காரை ஏற்றி படுகொலை செய்த சம்பவத்தில் மத்திய மந்திரியை பதவி நீக்கம் செய்யக்கோரி புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாதவன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சங்கர் கோரிக்கைகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கையில் கருப்பு கொடியை ஏந்தியபடியும், கருப்பு பட்டை அணிந்தும் கோஷமிட்டனர். இதேபோல புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட செயலாளர் கணபதி தலைமை தாங்கினார்.


Next Story