15-வது நாளாக விவசாயிகள் போராட்டம்


15-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Sept 2023 3:15 AM IST (Updated: 16 Sept 2023 3:16 AM IST)
t-max-icont-min-icon

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 வழங்க கோரி 15-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33.75 விலை வழங்க வேண்டும், எம்.எஸ்.சுவாமி நாதன் கமிட்டி பரிந்துரை மற்றும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி நாக்குபெட்டா படுகர் நல சங்கம் சார்பில், கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 15-வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் மிளிதேன், கேர்கம்பை, காவிலோரை கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், ஊட்டி படுகர் வணிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்திய தேயிலை வாரியம் சார்பில் 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும், அதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதால், விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். போராட்டத்தில் தேயிலை வாரியம் உடனடியாக 30 ஏ சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பதாகை ஏந்தி இருந்தனர். இதே போல ஊட்டி அருகே கேத்தி, கிண்ணக்கொரை பகுதிகளிலும் தேயிலை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story