17-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 வழங்க கோரி 17-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
நீலகிரி
கோத்தகிரி
எம்.எஸ்.சுவாமி நாதன் கமிட்டி பரிந்துரை மற்றும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் படி பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.33.75 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேயிலை வாரியம் உடனடியாக 30 ஏ சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாக்குபெட்டா படுகர் நல சங்கம் சார்பில், கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று 17-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பொரங்காடு சீமைக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story