18-வது நாளாக விவசாயிகள் போராட்டம்


18-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Sept 2023 1:15 AM IST (Updated: 19 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 வழங்க கோரி 18-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி

எம்.எஸ்.சுவாமி நாதன் கமிட்டி பரிந்துரை மற்றும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் படியும் பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.33.75 நிர்ணயிக்க வேண்டும். தேயிலை வாரியம் 30 ஏ சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாக்குபெட்டா படுகர் நல சங்கம் சார்பில், கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 18-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் பொரங்காடு சீமைக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் சிறு, குறு விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என பதாகைகளை வைத்திருந்தனர்.

1 More update

Next Story