மக்காச்சோளத்தில் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை


மக்காச்சோளத்தில் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை
x

சாத்தூர் பகுதிகளில் மக்காச்சோளத்தில் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் பகுதிகளில் மக்காச்சோளத்தில் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

மக்காச்சோள சாகுபடி

சாத்தூர் அருகே என்.சுப்பையாபுரம், முள்ளிசெவல், நல்லமுத்தன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் 1,500 ஏக்கருக்கு மேல் மக்காச்சோளத்தை பயிரிட்டுள்ளனர்.

சாகுபடி செய்த போது பருவ மழை நன்றாக இருந்ததால் பயிர்கள் நன்றாக வளர்ந்தது. தொடர்ந்து மழை இல்லாததால் முழுமையான விளைச்சல் இல்லாமல் போய்விட்டது. மக்காச்சோளம் பயிரிட ஒரு ஏக்கருக்கு உழவு, களை எடுத்தல், உரம் இடுதல் என ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. இந்தநிலையில் மழை இல்லாததால் போதிய விளைச்சல் இல்லை. இதனால் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது என விவசாயிகள் தேவனையுடன் கூறினர்.

விளைச்சல் இல்லை

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் மேலும் கூறியதாவது:-

மக்காச்சோளத்தில் பொதுவாக நல்ல விளைச்சல் இருந்தால் ஒரு ஏக்கரில் 18 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் இப்பொழுது மண் தன்மையை பொறுத்து 15 குவிண்டால் தான் கிடைக்கிறது. இந்த நிலையில் பயிர்கள் வளர்ந்த நிலையில் மழை இல்லாததால் பாதிக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் ஏக்கருக்கு 7 குவிண்டால் மட்டும் கிடைக்கிறது. விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் என்ன செய்வது என்பது தெரியாமல் கவலையில் உள்ளனர்.

இதனால் விவசாயிகள் சாகுபடி செய்த செலவை கூட எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story