விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2023 12:15 AM IST (Updated: 8 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சவுரிராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சகாபுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தென்பெண்ணை ஆற்றுக்கு தீர்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பேசி வரும் கர்நாடக மாநில துணை முதல்வரை கண்டித்தும், உரித்த தேங்காய்களை கிலோ ரூ.60-க்கும், கொப்பரை தேங்காய்களை கிலோ ரூ.160-க்கும் என விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விவசாயிகள் சங்கத்தினர் சபாபதி, ஏழுமலை, செல்வம், ஆனந்தன், தர்மலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணி, கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story