விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே உள்ள அரசன்குடி ஊராட்சியில் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்து மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடத்த வந்தனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததால், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய விவசாய சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, கடந்த ஆண்டை விட தற்போது மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் உரம் மானியத்தில் ரூ.50 ஆயிரம் கோடி குறைத்துள்ளனர், 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.29,400 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு குறைகளை தெரிவித்து, விவசாயிகளை பாதிக்கும் இந்த பட்ஜெட்டை முற்றிலும் எதிர்ப்பதாகவும், அதனை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன், திருவெறும்பூர் விவசாயிகள் சங்க ஒன்றிய குழு தலைவர் ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story