விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x

விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் தாசில்தார் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தி்ற்கு பாபநாசம் ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமை தாங்கினார். பொருளாளர் தங்கராசு, துணை செயலாளர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட துணை செயலாளர் காதர் உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமையல் செய்து சாப்பிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அனிதா கிரேசி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வருகிற 24-ந்தேதி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story