வேதாரண்யம் மல்லிகை பூவுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும்- விவசாயிகள்


வேதாரண்யம் மல்லிகை பூவுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும்- விவசாயிகள்
x
தினத்தந்தி 22 Dec 2022 7:00 PM GMT (Updated: 22 Dec 2022 7:01 PM GMT)

வேதாரண்யம் மல்லிகை பூவுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் மல்லிகை பூவுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, வேளாண்மை இணை இயக்குநர் ஜாக்குலாஅகண்டராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த திரளான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பேசினர்.

அப்போது விவசாயிகள் பேசியதாவது:-

மணியன்:- வேதாரண்யம் ஒன்றியத்தில் 25 கிராமங்களுக்கு மேல் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இதை நம்பி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு விளையும் மல்லிகை பூ 1 கிலோ ரூ.300 முதல் ரூ.500 வரை தான் விலை போகிறது. அதே நேரத்தில் மதுரையில் மல்லிகை பூ 1 கிலோ ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை என்ற அளவுக்கு விலை போகிறது. மதுரை மல்லி அதிக அளவுக்கு விலை போகும் நிலையில் வேதாரண்யம் மல்லிக்கு விலை குறைவாக கிடைப்பது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு விலை குறைவாக போவதற்கு இடைத்தரகர்களே முக்கிய காரணமாக இருக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். எனவே கூட்டுறவு சங்கம் அமைத்து வேதாரண்யம் மல்லிகை பூவுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

தமிழ்ச்செல்வன்:- உள்நாட்டில் உற்பத்தியாகும் பூச்சி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பூச்சி மருந்து விலை குறைவாக கிடைப்பதால் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். உள்நாட்டு பூச்சி மருந்துகளை தடை செய்த காரணத்தால் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் பூச்சி மருந்துகள் இறக்குமதி ஆகி பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே உள்நாட்டு பூச்சி மருந்துகள் தடை செய்வதை நீக்க வேண்டும்.

முஜீபுஷரீக்:- தென்னை விவசாயிகள் நலன் கருதி கஜா புயலின் போது பாதித்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும்.

கட்டுப்படியான விலை

சம்பந்தம்:-

உரம், பூச்சி மருந்து, விதை நெல் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் நெல்லிற்கு வழங்கப்படும் விலை உயரவே இல்லை. எனவே விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

பிரபாகரன்:-

குளிர்காலம் தொடங்கியுள்ளதால் கால்நடைகளுக்கு தொண்டை அடைப்பான் நோய் பரவுகிறது. இதை தடுக்க வேண்டும்.

வேதாரண்யம் மல்லிகை பூவுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

காளிதாஸ்:-

வேதாரண்யம் பகுதியில் முள்ளியாறு, மானங்கொண்டான் ஆறுகளில் மண்டியுள்ள ஆகாயதாமரைகளை அகற்ற வேண்டும். வேதாரண்யம் தாலுகா இயற்கை இடர்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பயிர்களுக்கு உரிய முறையில் பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. கணக்கெடுப்பில் முறைகேடு நடந்துள்ளது. இவ்வாறு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசினர்.


Next Story