தந்தைக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது


தந்தைக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2023 1:45 AM IST (Updated: 19 Sept 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

துடியலூரில் தந்தையை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்




தென்காசி மாவட்டம் சிவகிரி குமரபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 48). இவருடைய மகன் மணிகண்டன் (19). இவர்கள் 2 பேரும் கோவை மாவட்டம் கணபதி மணிகாரம்பாளையத்தில் உள்ள அன்பு நகரில் தங்கியிருந்து கட்டிட வேலை பார்த்து வந்தனர். கட்டிட உரிமையாளர் கண்ணன் என்பவர் குமாருக்கு வார சம்பளமாக ரூ.8 ஆயிரம் வழங்கி வந்தார். இதில் ரூ.3 ஆயிரத்திற்கு குமார் மதுகுடித்து வந்ததாக தெரிகிறது. இதனை மணிகண்டன் தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் தந்தை, மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தனது தந்தையை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளிகள் மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.



Next Story