பெண் கொலை வழக்கு: கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை


பெண் கொலை வழக்கு: கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை
x

பெண் கொலை வழக்கில் கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

மதுரை

மதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் கச்சம்மாள். இவரது வீட்டின் அருகில் குடியிருந்தவர்கள் இருளாண்டி-முனியம்மாள். கணவன், மனைவியான இவர்களுக்கும், கச்சம்மாளுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 25.11.2017 அன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஆயுதங்களால் கச்சம்மாளை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன்- மனைவியை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல்கள் சந்திரன், அழகன் ஆகியோர் ஆஜரானார்கள். முடிவில் அவர்கள் இருவரும் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இருளாண்டி, முனியம்மாளுக்கு தலா ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பளித்தார்.


Related Tags :
Next Story