உழவன் செயலியில் பயிர் சாகுபடிக்கான உர பரிந்துரைகளை பெறலாம்-வேளாண்மை இணை இயக்குனர் தகவல்


உழவன் செயலியில் பயிர் சாகுபடிக்கான உர பரிந்துரைகளை பெறலாம்-வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
x

உழவன் செயலியில் பயிர் சாகுபடிக்கான உர பரிந்துரைகளை பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை

தமிழ்நாடு அரசால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இணைய தளம் தான் தமிழ் மண் வளம். மண்ணின் வளத்தினை உறுதி செய்யும் காரணிகளான உப்பின் நிலை, கார அமில நிலை, சுண்ணாம்பு நிலை, மண்ணின் நயம் ஆகிய விவரங்களையும், விவசாயிகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு மிகவும் நேர்த்தியாக தமிழ் மண்வளம் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளமானது மண்ணின் தன்மைகளில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்யும் முறைகள் மற்றும் பேரூட்டம், இரண்டாம் நிலை சத்துக்கள், நுண்ணூட்டங்களின் பரிந்துரைகள் ஆகியவற்றை விவசாயிகள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே தெளிவாக தெரிந்துகொள்ளவும், அதன்படி சாகுபடி செய்யவும் ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் செல்போன் வாயிலாகவும், கணினி வாயிலாகவும், தமிழ் மண்வளம் என்ற இணையதளத்திற்கு சென்று தமிழ் மொழியினை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், விவசாயிகள் தங்கள் மாவட்டம், வட்டாரம், வருவாய் கிராமம், புல எண் மற்றும் ெசல்போன் எண் ஆகியவற்றினை உள்ளீடு செய்து தாங்கள் சாகுபடி செய்ய விரும்பும், பயிர்களுக்கேற்ப உரப்பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது தமிழ் மண்வள அமைப்பானது விவசாயிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் உழவன் செயலியிலும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் ஆன்ட்ராய்டு செல்போனில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து தமிழ் மண்வள அமைப்பினை பயன்படுத்தி தங்கள் நிலத்தில் சாகுபடி செய்யும் பயிர்களுக்கான உரப்பரிந்துரைகளை பெற்று பயன்பெறலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story