தாமரைக்குளம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


தாமரைக்குளம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

சேவூர் அருகே உள்ள தாமரைக்குளம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.

திருப்பூர்

சேவூர் அருகே உள்ள தாமரைக்குளம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.

மாகாளியம்மன் கோவில்

திருப்பூர் மாவட்டம் சேவூர் - நம்பியூர் செல்லும் சாலையில் வடக்கே 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூட்டப்பள்ளி பிரிவிலிருந்து கிழக்கே 1 கிலோமீட்டர் தொலைவிலும், அவினாசி - நடுவச்சேரி வழியாக கூட்டப்பள்ளி செல்லும் சாலையில் வடக்கே 7 கிேலாமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள கிராமம் தாமரைக்குளம் ஆகும். இந்த ஊரில் இருபக்கமும் அழகான நீரோடைகள் சூழ ஊருக்கு நடுவில் அமைந்துள்ளது விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் கோவில்.

விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் பிரதானமாகக் கொண்டுள்ள விவசாயப்பெருமக்களாலும், பக்தர்களின், பெரும் முயற்சியுடனும் திருப்பணிகள் செய்தும், கோபுரம் வர்ணவேலைகள் செய்தும், வருகிற 5 -ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் கூனம்பட்டி திருமடம் "வேதசிவாகம சிரோன்மணி" நடராஜ் சுவாமிகள் தலைமையில், வலையபாளையம் ஆதீனம் ரா.குமார் சிவாச்சாரியார் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

தீர்த்தகுடம், முளைப்பாரிகள்

கும்பாபிஷேகத்தையொட்டி, நாளை (திங்கட்கிழமை)காலை 11 மணிக்கு கூட்டப்பள்ளி மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்த குடங்கள், முளைப்பாரிகள் எடுத்து வருதல். மாலை 4 மணிக்கு, கணபதி பூஜை, மகாசங்கல்பம், முதல் கால யாகவேள்வி பூஜை, இரவு 8 மணிக்கு, அவினாசி தீரன் கலைக்குழுவினரின் கம்பத்து ஆட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம் கால யாகவேள்வி பூஜை சிவாச்சாரியார்கள் வழிபாடு, திரவிய யாகம், தீபாராதனை, மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகவேள்வி பூஜை, வேதசிவாகம திருமுறை பாராயணம், தீபாராதனை, இரவு 7 மணிக்கு எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், இரவு 8 மணிக்கு, கொங்கு பண்பாட்டு மையத்தின் ஈசன் சலங்கை ஆட்ட குழுவினர் வழங்கும் பாரம்பரிய பெருஞ்சலங்கை ஆட்டம் நடைபெறும்.

கும்பாபிஷேகம்

முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு, 4-ம் கால யாகவேள்வி பூஜை, கலசங்கள் புறப்படுதல், மகா தீபாராதனை. இதைதொடர்ந்து காலை 6 மணிக்கு விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் காலை 7 மணிக்கு விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மனுக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடக்கிறது. காலை 8 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை விழாக்குழுவினரும், பொதுமக்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.



Related Tags :
Next Story