சாதிய வன்மத்தை தூண்டும் வகையில் படங்கள் எடுக்கப்படுகின்றன: அண்ணாமலை குற்றச்சாட்டு
சாதிய வன்மத்தை தூண்டும் வகையில் படம் எடுக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரி,
தமிழக பாஜக தலைவர் அண்ணமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வன்முறையை தூண்டும்படி எடுக்கும் சாதிய படங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டுகிறார். ரெட் ஜெயண்ட் மற்றும் உதயநிதி ஆகியோர் சாதிய ரீதியாக படம் எடுக்கிறார்கள். பல்வேறு இடங்களில் சாதிய வன்மத்தை தூண்டும் வகையில் பல படங்கள் எடுக்கப்படுகின்றன. சாதிய வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும். 2047-ல் இந்தியா வல்லரசு நாடாக கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார்.
Related Tags :
Next Story