2 மாதங்களில் 25 ஆயிரம் வழக்குகளுக்கு இறுதி அறிக்கை - தென்மண்டல ஐ.ஜி.க்கு மதுரை ஐகோர்ட் கிளை பாராட்டு


2 மாதங்களில் 25 ஆயிரம் வழக்குகளுக்கு இறுதி அறிக்கை - தென்மண்டல ஐ.ஜி.க்கு மதுரை ஐகோர்ட் கிளை பாராட்டு
x

38 ஆயிரம் வழக்குகளில் விசாரணை விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்தார்.

மதுரை,

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பான வழக்கில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜராகி விளக்கமளித்தார்.

அப்போது அவர், தென்மண்டலத்தில் 2011 முதல் 2021 வரை பதிவு செய்யப்பட்ட 65 ஆயிரம் வழக்குகளில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 25 ஆயிரம் வழக்குகளுக்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 38 ஆயிரம் வழக்குகளில் விசாரணை விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அஸ்ரா கார்க் தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுவாமிநாதன் தென்மண்டல காவல்துறை தலைவர், துணை தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, வழக்கு விசாரணையை நவம்பர் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story