நிதி ஒதுக்கீடு விவகாரம்; முதல்-மந்திரியாக இருந்தபோது பிரதமர் மோடி பேசியது... கனிமொழி எம்.பி. பகிர்ந்த வீடியோ


நிதி ஒதுக்கீடு விவகாரம்; முதல்-மந்திரியாக இருந்தபோது பிரதமர் மோடி பேசியது... கனிமொழி எம்.பி. பகிர்ந்த வீடியோ
x

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்தபோது பேசிய வீடியோவை கனிமொழி எம்.பி. பகிர்ந்துள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் எதிர்கட்சித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது 'எக்ஸ்' தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அது பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்தபோது பேசிய பழைய வீடியோவாகும். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது;-

"ஒவ்வொரு வருடமும் குஜராத் அரசாங்கம் மத்திய அரசுக்கு ரூ.60,000 கோடியை வரியாக செலுத்துகிறது. ஆனால் குஜராத்துக்கு திரும்ப கிடைப்பது என்ன? 8,000 கோடி, 10,000 கோடி அல்லது 12,000 கோடிதான். மேலும் நாங்கள் போதுமான அளவிற்கு திருப்பி செலுத்திவிட்டோம் என மத்திய அரசு கூறுகிறது.

குஜராத் மாநில அரசை பிச்சைக்காரர்கள் என்று நினைத்துவிட்டீர்களா? தங்கள் சொந்த பணத்திற்காக மத்திய அரசிடம் குஜராத் மாநில அரசு கையேந்தி நிற்க வேண்டுமா?"

இவ்வாறு அந்த வீடியோவில் அப்போதைய குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடி பேசியுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள கனிமொழி எம்.பி., "ஒரு காலத்தில் முதல்-மந்திரி, தற்போது பிரதமர்" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




Next Story