காட்டெருமை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி
காட்டெருமை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
நீலகிரி
குன்னூர்
குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 70). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் நின்றிருந்த காட்டெருமை திடீரென பழனிவேலை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து குன்னூர் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் காட்டெருமை தாக்கி உயிரிழந்த பழனிவேல் குடும்பத்திற்கு முதல் கட்டமாக ரூ.50 ஆயிரத்தை குன்னூர் வனச்சரகர் ரவீந்தரநாத் வழங்கினார்.
Related Tags :
Next Story