குட்கா விற்ற கடை உரிமையாளருக்கு அபராதம்


குட்கா விற்ற கடை உரிமையாளருக்கு அபராதம்
x
தினத்தந்தி 13 Sept 2023 1:00 AM IST (Updated: 13 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு கடைத்தெரு, மூங்கப்பட்டி, எர்ணள்ளி, செக்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆய்வு செய்தார். அப்போது மூங்கப்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். குட்கா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார்.


Next Story