சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து


சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து
x

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை,

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வார்டில் உள்ள ஒரு அறையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த வார்டில் 5 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். தீ விபத்தை தொடர்ந்து அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.

பின்னர், விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கொரோனா வார்ட்டில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதிகாலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

மேலும், விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story