கலை நிகழ்ச்சியின் போது மாணவியின் முகத்தில் பற்றிய தீ


கலை நிகழ்ச்சியின் போது மாணவியின் முகத்தில் பற்றிய தீ
x

குன்னூரில் நடைபெற்ற நவராத்திரி மகா உற்சவ நிகழ்ச்சியில், மாணவியின் முகத்தில் தீப்பற்றியதால் பரபரப்பு நிலவியது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற நவராத்திரி மகா உற்சவ நிகழ்ச்சியில், மாணவியின் முகத்தில் தீப்பற்றியதால் பரபரப்பு நிலவியது. சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், வாழும் கலை நிறுவனர் ரவி சங்கர் கலந்து கொண்டார்.

அப்போது, கலை நிகழ்ச்சியில் ஈடுபட்ட மாணவி ஒருவர், வாயில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீயில் அதை ஊத முயன்றார். திடீரென அவரது முகம் மற்றும் வாய் பகுதியில் தீ பற்றியது. உடனே அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story