பிரேமலதாவை வரவேற்க பட்டாசு வெடித்ததே.மு.தி.க. நிர்வாகிகள் மீது வழக்கு


பிரேமலதாவை வரவேற்க பட்டாசு வெடித்ததே.மு.தி.க. நிர்வாகிகள் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரத்தில் பிரேமலதாவை வரவேற்க பட்டாசு வெடித்த தே.மு.தி.க. நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

தேனி அல்லிநகரத்தில் நேற்று முன்தினம் நடந்த தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு பேசினார். பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவரை நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தனர். இந்நிலையில், இந்த வரவேற்பின் போது சரவெடி பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும், சாலையை மறித்து ஊர்வலமாக சென்றதாகவும் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் புகார் செய்தார்.

அதன்பேரில், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் முருகராஜா, மாவட்ட பொருளாளர் மாயி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல், தேனியில், பெரியகுளம் சாலையில் ஆஸ்பத்திரி அருகில் பட்டாசு வெடித்து இடையூறு செய்ததாக தேனி போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுத்தார். அதன்பேரிலும் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் உள்பட நிர்வாகிகள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Related Tags :
Next Story