அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அப்துல் கலாம் சிலையை திறந்துவைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அப்துல் கலாம் சிலையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
சென்னை,
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.22 லட்சம் மதிப்பில் 7 அடி உயரமுள்ள அப்துல் கலாமின் சிலையை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
இதனை தொடர்ந்து, அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story