கொளத்தூர் : பல்வேறு திட்டங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்


கொளத்தூர் : பல்வேறு திட்டங்களை முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
x

கோப்புப்படம் 

முதல் அமைச்சர் ஸ்டாலின் புதிய திட்டபணிகள் குறித்து ஆய்வும் மேற்கொள்கிறார்.

சென்னை,

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு நலதிட்டங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். கொளத்தூருக்கு இன்று நேரடியாக செல்லும் முதல் அமைச்சர் ஸ்டாலின் அங்கு புதிய திட்டபணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

கடந்த மாதம் கொளத்தூர் சென்று இருந்த ஸ்டாலின் அங்கு மழை நீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு சென்ற அவர் அங்கு பல நல திட்ட உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story