பார்வையற்றோர் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.. குழந்தைகளுக்கு கேக் ஊட்டினார்
சென்னையில் பார்வையற்றோர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மனைவியுடன் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்
சென்னை,
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிறுமலர் பள்ளியில் முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவியோடு கலந்துகொண்டு பள்ளிச் சிறுமிகளோடு இணைந்து தனது 70வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
அப்போது அங்கிருந்த குழந்தைகளுக்கு கேக் ஊட்டியும் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
Related Tags :
Next Story