மீன் லாரி-கார் மோதல்; டிரைவர் பலி


மீன் லாரி-கார் மோதல்; டிரைவர் பலி
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே மீன் லாரி-கார் மோதிக்கொண்ட விபத்தில் கார் டிரைவர் பலியானார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரகுமான்கான் (வயது 43).டிரைவர். இந்த நிலையில் இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த நூர் நிஷா (40), ஹாதுன் பவுசியா (24), பர்வீன் (23) ஆகியோரை காரில் வாடகைக்கு ராமநாதபுரத்துக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கிருந்து அதே காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். நேற்று மதியம் 2.30 மணியளவில் அரியமான் பஸ் நிறுத்தத்தை கடக்க முயன்ற போது ராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடி சென்று கொண்டிருந்த மீன்லாரி, கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டிய டிரைவர் ரகுமான்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் உச்சிப்புளி போலீசார் விரைந்து சென்று பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நூர் நிஷா, ஹாதுன் பவுசியா, பர்வீன் ஆகிேயாரை ஆம்புலன்சில் ஏற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மீன்லாரி கவிழ்ந்தது. அதில் வந்த டிரைவர் மணிகண்டன் லேசான காயத்துடன் தப்பினார்.


Related Tags :
Next Story