பாம்பன் - தூத்துக்குடி மீனவர்கள் இடையே பிரச்சினை


பாம்பன் - தூத்துக்குடி மீனவர்கள் இடையே பிரச்சினை
x

பாம்பன் - தூத்துக்குடி மீனவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பாம்பன் துறைமுகத்தில் இருந்து கடந்த 14-ந் தேதி ஆழ்கடல் மீன்பிடி படகு ஒன்றில் பாம்பன் பகுதியை சேர்ந்த 14 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவ்வாறு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ஒரு விசைப்படகில் மீன் பிடிக்க வந்த மீனவர்கள் மீன்களுக்காக பாம்பன் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பு மீனவர்களுக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தூத்துக்குடி மீனவர்கள் தாக்குதல் நடத்தியதால் பாம்பனை சேர்ந்த மீனவர் காயம் அடைந்து உள்ளதை தொடர்ந்து அந்த மீனவருடன் பாம்பன் மீனவர்கள் கரை திரும்பினர். ராமேசுவரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற பின்னர் அந்த மீனவர் வீடு திரும்பினார்.சம்பவம் குறித்து பாம்பன் மீனவர்கள் இதுவரையிலும் புகார் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் கடலோர போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story