மீன்பிடி தடைக்காலம் எதிரொலி: வானகரம் சந்தையில் மீன்களின் விலை கணிசமாக உயர்வு


மீன்பிடி தடைக்காலம் எதிரொலி: வானகரம் சந்தையில் மீன்களின் விலை கணிசமாக உயர்வு
x

வார விடுமுறையை முன்னிட்டு மீன்களை வாங்க சந்தைகளில் அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர்.

சென்னை,

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாத நிலையில், தற்போது மீன் சந்தைகளில் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இருப்பினும் இன்று வார விடுமுறையை முன்னிட்டு, விலை உயர்வை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். சென்னை வானகரம் மீன் சந்தையில் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக வஞ்சரம் ஒரு கிலோ 1,200 ரூபாய்க்கும், சங்கரா 200 முதல் 250 ரூபாய்க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story