சிவகங்கையில் மீன்பிடி திருவிழா கோலாகலம்; 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு
மீன்பிடி திருவிழாவில் கலந்து கொள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் மு.சூரக்குடி பகுதியில் அமைந்திருக்கும் கண்மாய் நீரைக் அங்குள்ள மக்கள் விவசாயத்திற்கு பயனபடுத்தி வருகின்றனர். அங்கு நெல் அறுவடை நடைபெற்றுள்ள நிலையில், கண்மாய் நீர் வற்றி வருவதைத் தொடர்ந்து, இன்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.
இந்த மீன்பிடி திருவிழாவில் கலந்து கொள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். அவர்கள் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, அயிரை வகை மீன்களை போட்டிப்போட்டு பிடித்துச் சென்றனர்.
இடுப்பளவு வரை இருந்த தண்ணீரில் இறங்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பல்வேறு வகையான வலைகளைக் கொண்டு மீன்களைப் பிடித்தனர். கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், பல்வேறு நீர்நிலைகளில் இதுபோன்ற மீன்பிடி திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.