பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில்24 இடங்களில் பா.ம.க. கொடியேற்று விழாடாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்பு


பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில்24 இடங்களில் பா.ம.க. கொடியேற்று விழாடாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்பு
x
தினத்தந்தி 26 March 2023 7:00 PM GMT (Updated: 26 March 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் 24 இடங்களில் பா.ம.க. கொடியேற்று விழா நடந்தது. இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டார்.

கொடியேற்று விழா

தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி உள்ளிட்ட 24 இடங்களில் பா.ம.க. 2.0 இலக்கை நோக்கிய பயணத்தில் தொடர் கொடியேற்று விழா தர்மபுரி பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரா.அரசாங்கம் தலைமையில் நடைபெற்றது. தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், மாநில உழவர் பேரியக்க செயலாளா் வேலுசாமி, மாநில இளைஞரணி செயலாளர் செந்தில், முருகசாமி, மாநில நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, பாடி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பழைய ஒட்டுப்பட்டி, ரங்கநாதன் நகர், விடிவெள்ளி நகர், புது ஒட்டுப்பட்டி, கொட்டாய் மேடு, பொ.மல்லாபுரம், பொ.நடூர், துறிஞ்சிப்பட்டி டிப்போ, கதிர்புரம், விழுதுப்பட்டி, ஜீவா நகர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட 24 இடங்களில் பா.ம.க. கொடியேற்றி வைத்தார்.

அரசு பஸ்கள்

பின்னர் அவர் பேசியதாவது:-

10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்றால் பா.ம.க. 2026-ல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு பா.ம.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழகத்தில் அரசு பஸ்கள் மட்டும் நஷ்டத்தில் இயங்குகிறது. தனியார் பஸ்கள் லாபத்தில் இயங்குகிறது. தர்மபுரி மாவட்டத்திற்கு மற்ற மாவட்டத்தில் பழுதடைந்த பஸ்களை தான் தருவார்கள். தர்மபுரி மாவட்டத்தில் அதிக விபத்துகள் நடக்க பழைய பஸ்கள் தான் காரணம் ஆகும். ஓய்வுபெற்று 88 மாதம் முடிந்த பின்னரும் போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவை தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் இமயவர்மன், மாவட்ட தலைவர் அல்லிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர்கள் மைக்கண்ணன், சிவக்குமார், மாநில நிர்வாகி ராமசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, கார்த்தி, ரங்கநாதன், சின்னராஜி, கலைமணி, செல்வம், நகர செயலாளர் கார்த்திக், தங்கராஜ், நிர்வாகிகள் முத்துக்குமார், மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஜெய்குமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story