சென்னை விமான நிலையத்தில் சீர்படுத்தப்பட்ட ஓடுபாதையில் இன்று முதல் விமானங்கள் இயக்கம்


சென்னை விமான நிலையத்தில் சீர்படுத்தப்பட்ட ஓடுபாதையில் இன்று முதல் விமானங்கள் இயக்கம்
x

சென்னை விமான நிலையத்தில் சீர்படுத்தப்பட்ட ஓடுபாதையில் இன்று முதல் விமானங்கள் இயக்க உள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ப்ராவோ ஓடுபாதை வளைவாக இருந்ததால் முதன்மை ஓடு பாதைக்கு விமானங்கள் வருவதற்கு கூடுதல் நேரம் பிடித்தது. இதனால் எரிபொருள் அதிகமாக செலவானது. தற்போது ப்ராவோ ஓடுபாதை நேராக்கப்பட்டுள்ளது.

இதனால் விமானங்கள் இயக்கம் துரிதப்படுத்தப் படுவதோடு, போக்குவரத்து நெருக்கடி நேரங்களில் விமானங்கள் இயக்கம் தாமதமாவது தவிர்க்கப்படும். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் சீர் செய்யப்பட்ட ப்ராவோ ஓடுதளம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. 90 சதவீத உள்நாட்டு, சர்வதேச, சரக்கு விமான போக்குவரத்து நடைபெற்று வரும் முதன்மை ஓடுபாதைக்கு இணையானதாக ப்ராவோ ஓடுபாதை இருக்கும்.

ப்ராவோ ஓடுபாதை செயல்பாட்டுக்கு வரும் நிலையில் வெளிச்செல்லும் விரைவு ஓடுபாதை 1 மற்றும் 2-க்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இது நிறைவடைந்த பின் மணிக்கு 36 விமானங்கள் இயக்கம் என்பது மணிக்கு 45 முதல் 50வரை இயக்கம் என அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை விமான நிலைய மக்கள் தொடர்பு மேலாளர் எல் விஷ்ணுதாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story